"குருதேவர்" என்ற பெயரில் சித்தர் நெறிக் கருத்துக்களைத் தாங்கி இந்த மாத ஏடு 1984 முதல் 1988 வரை குருதேவர் அவர்களின் மேற்பார்வையில் அச்சிட்டு மக்கள் மத்தியில் உலா வரச் செய்யப் பட்டன.
இந்த மாத ஏடு பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் எழுத்துக்களையும், அவை சார்ந்த கருத்தோட்டக் கட்டுரைகளையும், சமுதாய அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய கண்ணோட்டங்களையும் தாங்கி வெளி வந்தது.
இவற்றில் உள்ள கட்டுரைகள் தமிழர் அனைவராலும் படிக்கப் பட வேண்டியவை. உலகத் தமிழர்களுக்காக இவை இங்கே பாதுகாக்கப் படுகின்றன.
இந்த வெளியீடுகள் வருட வாரியாகப் பிரித்து வகைப் படுத்தப் பட்டுள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.