இங்கே உள்ளீர்கள் :  முன்னுரை
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

முன்னுரை

குருதேவர்,ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்இந்த வலைத்தளத்தில் உள்ள அச்சிட்டவைகளை தற்போது PDF கோப்புக்களாகவே படித்திடலாம்.  

  அருள்மிகு குருதேவர், 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்  அவர்கள் குவலய குருபீடமாகவும், இந்து மதத் தந்தையாகவும், இந்து வேத நாயகமாகவும் செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற புத்தகங்களையும், கட்டுரைகளையும், அஞ்சல் வடிவக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழினத் தலைமை ஆச்சாறியக் குருபீடமாக இருந்து பரம்பரை மறைகளாக (இரகசியங்களாக) இருந்து வந்த தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திடுவதற்கு ஏதுவாக வெளியிட்டுள்ளார். தம் காலத்தில் சில புத்தகங்களையும், கட்டுரைகளையும் தமது நேரடி மேற்பார்வையில் அச்சிட்டு வழங்கினார்.

  முதலில் 1984 முதல் மாத வெளியீடுகளாக 'குருதேவர்' என்ற பெயரில் சுற்றறிக்கைகள் வெளி வந்தன. பின்னர் சில ஆண்டுகள் கழித்து 1993இல் 'இந்து ஆரணம்' என்ற பெயரில் மாதப் பத்திரிகையாக வெளியிடப்பட்டன. இதனிடையே 1980 முதலே அவ்வப்போது சிறிய பெரிய நூல்களாக அச்சிட்டு வெளியிடப்பட்டன. சுற்றுப் பயணங்ளின் போது அறிவிக்கைகள் அச்சிட்டு வழங்கப்பட்டன. அவை அனைத்தையும் இங்கே எல்லோரும் படிப்பதற்கு என வெளியிடுகின்றோம். படித்துப் பயன்பெறவும்.

 உலகத் தமிழரிடையே சிந்தனைப் புரட்சி, எண்ணப் புரட்சி, கருத்துப் புரட்சி, ... முதலியவை மலர வேண்டும். தமிழர்களும், தமிழ்மொழியும் உலக இனங்கள் சிலவற்றால் ஆங்காங்கே தாழ்த்தப் பட்டும், அழிக்கப்பட்டும் வரும் இந்தக் காலக் கட்டத்தில் பல தமிழர்கள் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல விதங்களில் செயல் படுகின்றார்கள். ஏன் தமிழினம் காக்கப்படல் வேண்டும்?, தமிழின விடுதலை உலகத்திற்கு என்ன நன்மை பயக்கும்?,  தமிழர்கள் விடுதலை பெறுவதனால் தமிழர்களுக்கு மட்டும்தான் நன்மையா? அல்லது உலகத்திற்கே நன்மையா? எத்தனையோ உலக பழமையான இனங்கள் அழிந்தது போல் தமிழினம் அழிய விடுவதனால் உலகத்திற்கு என்ன இழப்பு? ... போன்ற பல வினாக்களுக்கு இந்தக் கட்டுரைகள் விடையளிக்கும். மேலும் சிந்தனைகளைத் தூண்டும் விதமாக இவற்றில் தத்துவ வித்துக்களும், கருத்து நாற்றுக்களும் உள்ளன. தங்கள் தங்களின் விளைநிலங்களில் வளர்த்து கொழுத்த அறுவடையைப் பெற்றிட இவையே அடிப்படையாக அமைந்திடும்.

  இந்த அச்சிட்டவைகள் உலகப் பொதுவில் வைக்கப்படுகின்றன. அச்சிட்ட புத்தகங்களை நேரடியாக கணிணித் திரையில் பார்ப்பதற்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. 

  மேலும் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்க: <indhuism@gmail.com>

 

His Holiness 12th Pathinen Sitthar Peedam has written thousands of books. Out of these some books got printed under His direct supervision. His Holiness wanted these books to reach everyone in the world. Hence some of them are getting hosted here. The contents of all of them, with the exception of two booklets, are in Tamil.

Those who could not follow Tamil, can have a look at www.induism.org to know more about His Holiness the 12th Pathinensiddhar Peedam and His writings.

Contact the disciples of His Holiness at <indhuism@gmail.com>

 

    குருதேவர் அவர்களின் எழுத்துக்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் வெளியிடும் முயற்சியாக தற்போது மாத வெளியீடுகள் 'இந்து வேதம்' என்ற பெயரில் வெளியிடப் படுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக வெளியிடப் பட்டவற்றை https://newsletters.gurudevar.org என்ற வலைத் தளத்தில் படிக்கலாம்.


 

மேலே செல்ல அடுத்த பக்கம் »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.

அருளாட்சி நாயகம்

11th Peedam தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை,  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || மாத வெளியீடுகள் || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |