குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தம்முடைய மேற்பார்வையில் அச்சிட்டு வெளியிட்ட புத்தகங்களை இங்கே காணலாம். மொத்த வெளியீடுகளில் எங்களுக்குக் கிடைத்தவை இங்கே தரப்படுகின்றன.
Gurudevar, 12th Pathinen Siddhar Peedam, wrote hundreds of books on religion, medicine, social welfare, etc. He took special pains to print out these books under His direct supervision. Many of such books are hosted here in image format. Click on a link to view the book.
கீழ்க் காணும் வகைகளின் கீழ் பல நூல்கள் அச்சாகி உள்ளன. மொத்தம் 36 நூல்கள் 7 பிரிவுகளின் கீழ் வைக்கப் பட்டு உள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.