1987இல் ஏழாவது வெளியீடாக குருதேவர் அவர்களே அச்சிட்ட புத்தகம் இது. இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் இ.ம.இ.யின் முதல் இரு தலைவர்களாக செயல்பட்டிட்ட சித்தர் ஏளனம் பட்டியார் அவர்களும், சித்தர் காக்கையர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்களும் எழுதியவையே என மேற்கோளாகக் காட்டி சுருக்கமாக உள்ளன. சிறிய கையடக்கப் புத்தகமாக அச்சிடப் பட்ட இப் புத்தகத்தின் PDF வடிவம் இங்கே தரப்படுகின்றது.
7வது வெளியீடு: 26-1-1987; காணிக்கை ரூ.18.00
வெளியீடு: அருட்பணி விரிவாக்கத் திட்டக் குழுவினர்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.