நூலின் தலைப்பு:
இந்து வேதாகமப் பல்கலைக் கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்துள்ள சங்கராச்சாரியாரின் நூறாவது ஆண்டு விழாவை இந்தியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று குருதேவர் சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்களுக்கு இந்துமதப் பற்றும், தங்களுடைய இந்து மதம் பற்றிய விழிப்புணர்வும் உருவாகிடுமா என்ற எதிர்பார்ப்புடன் இந்த நூல் வெளியிடப் பட்டுள்ளது.
நூலின் அளவு: 34 பக்கங்கள் அட்டையுடன்; A5 size Book (A4 அளவில் பாதி)
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.