சித்தரடியானாகவும், சித்தரடியாளாகவும், சித்தரடியாராகவும் தயாராகிட வருபவர்கள் செய்ய வேண்டிய பூசைமுறைகளும், குருவிற்குத் தர வேண்டிய உறுதிமொழிகளும், குருகாணிக்கை முறைகளும் இந்த அச்சிடப்பட்ட புத்தகத்தில் விளக்கமாக உள்ளன. கலியுகத்தில் தோன்றிச் செயல்பட்ட பீடாதிபதிகள் மூவரும் ஐம்புலன்களும் காண வாழுகின்ற நிலையில் இருப்பதாலும், விண்ணும் மண்ணும் இணைக்கும் பீடாதிபதியாக குருதேவர் செயல்பட்ட காரணத்தினாலும்; உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் இந்த முறைகளைத் தெரிந்து கொண்டு குருதேவரின் ஓவியத்தையோ, படத்தையோ வைத்துக் கொண்டு அருளுலக வாழ்க்கையில் தயாராகலாம்; அருட் சித்திகளைப் பெறலாம்.
குருதேவரின் நேரடி மாணாக்கர்களில் யாராவது ஒருவரிடம் நேரிலோ, அஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ விளக்கங்களைப் பெறலாம்.
…… அறிக்கையை இங்கே படிக்கவும் ……